Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரே இடத்தில் நடைபெறும் சூர்யா-கார்த்தி படப்பிடிப்பு?

Suriya-Karthi shooting at the same location

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சூர்யா மற்றும் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜப்பான் திரைப்படத்தை கூக்கு, ஜோக்கர், ஜிப்ஸி படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.