இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘கங்குவா’ திரைப்படத்தில் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளதாக சமீபத்தில் படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.
இந்நிலையில், ‘கங்குவா’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் மாஸ் லுக்கின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Capturing the essence of our #Kanguva 🦅
Post shoot photoshoot @Suriya_offl @directorsiva @GnanavelrajaKe @avigowariker @kabilanchelliah #SerinaTixeira pic.twitter.com/Hqk2VwsgTH
— Studio Green (@StudioGreen2) January 31, 2024