Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

2000 கோடி வசூல் செய்த படத்தில் நடிக்க மறுத்த சூர்யா!

சூர்யா இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் சூரரை போற்று படம் ஓடிடி தளத்தில் வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் செம்ம ஆவலுடன் இருக்கின்றனர். அப்படியிருக்க இப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி வரவுள்ளது.

இந்நிலையில் சூர்யாவிற்கு தமிழ் தாண்டி தெலுங்கிலும் செம்ம மார்க்கெட் உள்ளது, அவருடைய படங்கள் தெலுங்கிலும் செம்ம ஓட்டம் ஓடும்.

இவருக்கு பாகுபலி படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுகினார்களாம்.

ஆனால், சூர்யாவோ தன் கால்ஷிட் பிரச்சனையால் அப்படத்தை தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் சூர்யாவின் மார்க்கெட் இன்று இந்தியா முழுதும் உச்சத்தில் இருக்கும் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.