நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா, வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான சூர்யா, படத்துக்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டு சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார்.
நந்தா, மௌனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், சிங்கம், அயன் என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ள சூர்யா நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சூர்யாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். டுவிட்டரில் #HappyBirthdaySuriya என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி முதலிடத்தில் இருந்தது .
சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி சூரரைப்போற்று படக்குழு ‘காட்டுப்பயலே’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளது. தனது பிறந்தநாளை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள சூர்யா தனது புதிய லுக்கை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
View this post on Instagram
Happy to be here and meet you all. Let’s spread love and positivity!! #Staysafe #LoveUall