நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர்.
சினிமா மட்டும் இல்லாமல் இவர் சமுகத்திற்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். மேலும் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வெளியாகியிருந்தது.
அதன்பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் OTT யில் வெளியாகவுள்ளது. இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார், அப்படத்திற்கு வாடிவாசல் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெற்றிமாறனுக்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அடங்க மறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் உடன் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.