தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.
சமீபகாலமாக நடிகர் சூர்யா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்.
இதன் காரணமாக பிஜேபிக்கு சூர்யாவுக்கும் இடையே மோதல்கள் உருவாகி வருகிறது. ஜோதிகாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சூர்யா முஸ்லிமாக மாறி விட்டார் என்று பிஜேபியினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சூர்யா என்னுடைய நண்பரும் நடிகரும் இசையமைப்பாளருமான கிரிஸ் இசையமைக்க வேல்முருகன் தன்னுடைய குரலில் பாடியுள்ள வெற்றிவேலா என்ற பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் சூர்யா எங்களுக்கு எம்மதமும் சம்மதம் என்பதை நிரூபித்துள்ளார்.
Here’s #Vetrivela a devotional album of my good friend, actor, singer, music composer @krishoffl on @SonyMusicSouthhttps://t.co/oDXk2BIaHc
Congratulations!@kavingarmadhan @thisispriyamali@sirajkhan_skp @barani_offl @balaji_indian#வெற்றிவேலா pic.twitter.com/1U80dM4oqN
— Suriya Sivakumar (@Suriya_offl) September 22, 2020