Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்- நடிகர் சூர்யா

Suriya tests positive for coronavirus

நடிகர் சூர்யா தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த சூரரைப் போற்று ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனக்கு கொரொனா தொற்று வந்ததாகவும், அதிலிருந்து தற்போது தான் மெல்ல மீண்டு வருவதாக டுவிட் செய்துள்ளார்.

இந்த டுவிட்டில் அதில் ‘‘’கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.