Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் 2024-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல், சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் இந்தியில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

போயபட்டி சீனு- சூர்யா
இந்நிலையில், நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குனர் போயபட்டி சீனுவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கில் லெஜெண்ட், சரைனோடு, அகண்டா போன்ற மாஸ் ஆக்ஷன் படங்களை இயக்கிய போயபட்டி சீனு இயக்கத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது உறுதியாகும் பட்சத்தில் ‘கங்குவா’ படப்பிடிப்பிற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Suriya upcoming movie update
Suriya upcoming movie update