தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா.
தற்போது சென்னையில் ஈசிஆர் பகுதியில் வாடிவாசல் படத்தில் டெஸ்ட் சூட் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கொண்ட வைத்து வருகின்றன. இப்படியான நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சூர்யாவின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிற நிலையில் இது பற்றிய தகவல் வெளி வந்திருப்பது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
