சிறையில் தந்தை, மகன் என இருவர் போலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார்களின் இந்த செயல்களுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இப்படி ஒரு மோசமான செயலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்கள் மனதை வெல்ல முடியாது.
அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும். குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணை போனவர்களும் விரைவில் தண்டிக்கப்பட்டு நீதி நிலை நிறுத்தப்படும் என பொது மக்களில் ஒருவனாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
’நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று நம்புவோம். #JusticeForJayarajandBennicks pic.twitter.com/oAgZbZVe9h
— Suriya Sivakumar (@Suriya_offl) June 27, 2020