Tamilstar
News Tamil News

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா விடுத்த சரமாரியாக கேள்விகள் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சூர்யா நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும்மக்களுக்கு பரிச்சயமாகி வருகிறார்.தற்போது வெளியாகியுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அவர் சரமாரியான கேள்விகளை விடுத்துள்ளார் அவையாவன,

முப்பது கோடி மாணவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?

மூன்று வயது குழந்தைகள் எப்படி மூன்று மொழி படிக்க முடியும்?

நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்பட இருக்கிறதே அதற்கு பதில் என்ன?

கல்வியில் சிறந்த நாடுகளில் எட்டாம் வகுப்பு வரை எந்த தேர்வு இல்லை என்கின்ற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சிறந்த கல்வி ஆகும்.

நுழைவுத்தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு என்று மக்கள் தொடர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?

1,80,000 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் ஒருவர் மட்டும் பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?

50,000 கல்லூரிகள் 12000 ஆக குறைக்கப்படும், கோச்சிங் சென்டர் அதிகப்படுத்துவது தான் புதிய கல்வி கொள்கை யார்?

சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரே ஒரு ஆசிரியர் அமைப்பும், ஒரே ஒரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?

விதவிதமான கல்வி முறைகளை வைத்துக்கொண்டு தேர்வு மட்டும் போதுவானது என்பது எப்படி சரியாகும்?

எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் வெளிப்படையா இருக்கின்றோமே ஏன்?

இப்படி சரமாரியாக கேள்வியை புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகை நடிகர் சூர்யா விடுத்துள்ளார்.