தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது தொடர்ந்து விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.
இதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் வணங்கான் என்ற படத்தில் மீனவனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுவும் அது சூர்யா மற்றும் சிவா கூட்டணியில் உருவாகப் போகும் படத்தில் அறிவிப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
