தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், வெளியாகி யூடியூபில் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.
மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர், மேலும் இப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வரும் 2021ஆம் புத்தாண்டில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.