தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இப்படத்தின் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி ‘தீ’யுடன் தொடங்கி இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ‘சூர்யா 43’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை நஸ்ரியா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.