தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா விபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதாவது, சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பவர் கடந்த 24.08.2023 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியறிந்த நடிகர் சூர்யா எண்ணூரில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.