நடிகர் சுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே நல்ல விமர்சங்களையே பெற்றுள்ளது.
மேலும் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான M.S.தோனி திரைப்படத்தில் இவர் தோனியாகவே வாழ்ந்திருப்பார்.
கடந்த ஞாயற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள அவரின் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு நடிகர் சுஷாந்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளான்.
மேலும் அவர் மறைந்த செய்தியை தாங்க முடியாமல் அந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.