Tamilstar
News Tamil News

ரசிகர் கேட்டதற்காக ரூ 1 கோடி கொடுத்த சுஷாந்த், நெகிழ்ச்சி தகவல்

சுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் கை போ சே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

ஆரம்பத்தில் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்தார், முதல் படமே நல்ல ஹிட், அதனால் பெரிய வாய்ப்புக்கள் தேடி வந்தது.

இதில் குறிப்பாக இவர் நடித்த எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் மெகா ஹிட் அடித்து, பட்டித்தொட்டியெல்லாம் இவரை பிரபலப்படுத்தியது.

இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரை பற்றி பல தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் சிறப்பு தகவலாக ஒரு முறை கேரளா வெள்ளத்தில் ரசிகர் ஒருவர் எனக்கு தானம் செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றது.

ஆனால், என்னிடம் பணம் இல்லை என சொன்னதற்கு, சுஷாந்த் ரூ 1 கோடி அவர் அக்கவுண்டில் போட்டுள்ளார், இந்த தகவல் தற்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.