சுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் கை போ சே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
ஆரம்பத்தில் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்தார், முதல் படமே நல்ல ஹிட், அதனால் பெரிய வாய்ப்புக்கள் தேடி வந்தது.
இதில் குறிப்பாக இவர் நடித்த எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் மெகா ஹிட் அடித்து, பட்டித்தொட்டியெல்லாம் இவரை பிரபலப்படுத்தியது.
இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவரின் உடல் பரிசோதனை செய்து, சுஷாந்த் தற்கொலை தான் செய்துக்கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் தற்கொலை செய்த போது வீட்டில் சமையல் வேலை செய்பவர்கள் மற்றும் நண்பர் ஒருவர் இருந்ததாக கூறியுள்ளனர். குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறதாம்.