தென்னிந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர் என பன்முக திறமைகளோடு வளம் மட்டுமே டி ராஜேந்தர். தற்போதும் கூட விநியோகஸ்தர் கூட்டமைப்பு தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து வரும் இவர் அரசியலிலும் சில காலம் ஈடுபட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வரும் டி ராஜேந்தர் தன்னுடைய மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ஆகியோருடன் எடுத்துக் கண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிகிச்சையில் இருந்து வரும் டி ராஜேந்தர் பார்ப்பதற்கு டல்லாக இருப்பதால் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். கூடிய விரைவில் அவர் பூரண குணம் அடைந்து இந்தியா திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
