இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்து வரும் தமன்னாவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பப்ளி பவுன்சர், பிளான் A பிளான் B, குர்துண்டா சீதாகாலம் என மூன்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சிரஞ்சீவியுடன் போல சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் தமன்னா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் கலக்கலாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தற்போது கேஷுவலான உடையில் சூப்பராக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram