தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் கடைசியாக நடிகர் விஷாலுடன் இணைந்து ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தமிழில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
அதன் பிறகு தமன்னா ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வந்த தமன்னா தற்போது புடவையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அப்புகைப்படத்தில் நடிகை தமன்னா முன்புறம் ஜன்னல் வைத்தது போல் டிசைனில் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு பச்சை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram