Tamilstar
News Tamil News

பலரையும் கவலையில் ஆழ்த்திய சோக சம்பவம்!..நடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு

நடிகை தமன்னாவுக்கு கடைசியாக தமிழில் ஆக்‌ஷன் படம் வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக அவர் இப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவரு படத்தில் பாடலுக்கு மட்டும் நடித்திருந்தார். சில படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான That is Mahalakshmi படத்தில் நடித்திருக்கிறார். உலக நிகழ்வுகள் குறித்தும் தன்னுடைய கருத்தை சமூக வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கழுத்தை வெள்ளை போலிசார் மிதித்து கொலை செய்த சம்பவம் ஆகியவற்றால் மன வறுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதற்காக அவர் தன் முகத்தில் கரியை பூசி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன் உணர்வுகளை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மௌனம் உங்களை காப்பாற்றாது. மனிதன், விலங்குகளின் உயிர் முக்கியம். அவற்றை முடக்குவது உலக விதிமுறைக்கு எதிரானது. மனிதனாக இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும். என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பு குவிந்துள்ளது.