தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் சமீப காலமாக பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் உட்பட அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் கேட்க விரும்பும் கேள்விகள் குறித்து பேசியுள்ளார்.
விஜய்யிடம் தளபதி 68 படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பேன், அஜித்திடம் வீரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சமைத்து கொடுத்த மிருதுவான இட்லியை கேட்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் பைக் ரைட் கூட்டி சொல்லி கேட்பேன்.
சூர்யாவிடம் கங்குவா படத்தின் கதை என்ன என்று கேட்பேன், தனுஷை மும்பை வந்தால் போன் பண்ண சொல்லுவேன், ஆனால் அவர் இதுவரை போன் பண்ணதில்லை. எனவே திரும்பவும் அதையே தான் கேட்பேன் என தெரிவித்துள்ளார்.
