Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு!

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது.  இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.

இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம்.

எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.

இதன் கீழே தனுஷ், ஓம் நமசிவாய, அன்பை பரப்பவும் என்றும் ஐஸ்வர்யா, “உங்கள் மீது எப்போதும் மிகுந்த அன்பு” என்று குறிப்பிட்டு புன்னகைக்கும் எமோஜியுடன் “கடவுளின் வேகம்” என்று தெரிவித்துள்ளார்.