இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார்.
அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் தற்போது ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
யாத்ரா – லிங்கா இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவின் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் தின விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “எந்த சூரியனும்.. இந்த குழந்தைகளின் விளையாட்டு உற்சாகத்தை நிறுத்த முடியாது. காலை ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் ஓடுகிறார்கள். என் மகன்களின் பிரகாசத்தை கண்டு புன்னகைத்தபடி நான் நின்றுகொண்டிருக்கிறேன்” என புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
No amount of ☀️ sun..could stop these kids’ spirit of sportsmanship fun..
They ran and tan in the morning 🌞 sunshine..
While I stood there basking and smiling at my sons shine ✨ #sportsday #aboutlastmorning #sons 🧡🧡 pic.twitter.com/WU6OBpHv3T— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) February 25, 2023