Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல தமிழ் இயக்குனர் பாபா விக்ரம் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Director Baba Vikram Passes Away

தமிழ் சினிமாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் மீனா பிரேம் குமார் நடிப்பில் வெளியான கண்ணம்மா படத்தைத் தயாரித்து இயக்கியவர் பாபா விக்ரம். அதுமட்டுமல்லாமல் கருணாஸ், கோவை சரளா, ஆகியோர் நடித்த பொம்மை நாய்கள் என்ற படத்தையும் இயக்கி தயாரித்தார்.

தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் உருவாகி வரும் அதிர்ஷ்டம் என்ற படத்தை இயக்கி தயாரித்து வந்தார். ஆழ்வார்குறிச்சியில் பாபா கோவிலை எழுப்பி வழிபட்டு வருகிறார். இப்படியான நிலையில் 82 வயதாகும் இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Director Baba Vikram Passes Away
Director Baba Vikram Passes Away