தமிழ் சினிமாவின் ஒரு சில படங்கள் ஏன் ஓடியது என்றே தெரியாது. ஏனெனில் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து இருக்கும்.
ஆனால், படம் விமர்சனத்திற்கு நேர் மாறாக செம்ம ஓட்டம் ஓடும், அந்த வகையில் மோசமான விமர்சனங்களை சந்தித்து ஹிட் அடித்த படங்களை பார்ப்போம்..
காஞ்சனா3
லாரன்ஸ் நடிப்பில் எப்போதும் காஞ்சனா சீரிஸ் மெகா ஹிட் அடிக்கும், அந்த வகையில் காஞ்சனா கடைசி பாகம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றாலும், காஞ்சன சீரிஸ் என்பதாலேயே ஹிட் அடித்தது.
பிகில்
விஜய், அட்லீ காம்போவில் மிக மோசமான விமர்சனத்தை பெற்ற படம் பிகில், அப்படியிருந்தும் விஜய் என்ற ஒன் மேன் ஷோவால் படம் ஹிட் அடித்தது.
திரிஷா இல்லன்னா நயன்தாரா
ஆதிக் இயக்கத்தில் வெளிவந்த திரிஷா இல்லன்னா நயன்தாரா பல மோசமான விமர்சனத்தை பெற்றாலும், டீன் ஏஜ் ரசிகர்களால் படம் ஹிட் ஆனது.
திரௌபதி
படத்திற்கு மிக மோசமான விமர்சனத்தை சந்தித்தாலும், சர்ச்சைகள் மட்டுமே இப்படத்தை ஹிட் ஆக்கியது.