Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆஸ்காருக்கு தேர்வாகியுள்ள நான்கு தமிழ் படங்கள்.. முழு விவரம் இதோ

tamil movie oscar-award-update

இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பில் 96-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை பரிந்துரை குழுவினர் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 22 திரைப்படங்கள் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்படுகிறது.

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை -1’, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’, வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’, இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் வெளியான ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படமும் முன் மொழியவுள்ள பட்டியலில் உள்ளது. தமிழில் 4 திரைப்படங்களும், தெலுங்கில் 4 திரைப்படங்களும், இந்தியில் 11 திரைப்படங்களும், மலையாளத்தில் ஒரு திரைப்படமும், மராத்தியில் 2 திரைப்படமும் இந்த பரிந்துரை பட்டயலில் இடம்பெற்றுள்ளன. மலையாளத்தில் ‘2018’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil movie oscar-award-update
tamil movie oscar-award-update