ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரித்துள்ள படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’. பரணி ஜெயபால் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்ததோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயராகி வரும் நிலையில், இப்படத்தின் பிரேம்ஜி அமரன் வாயில் சிகரெட், கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் பிரேம்ஜியுடன் எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்ஷி திக்ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.