பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு

Bookmark and Share

பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு

2.0 படம் தமிழ்நாட்டில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. முதல்நாளே தமிழ்நாட்டு வசூல் ரூ.35 கோடியைத் தொடும் என்கிறார்கள்.

திரையரங்குகள் நேற்று அதிகாலை முதலே படத்தின் காட்சிகளை திரையிட தொடங்கிவிட்டன. படத்தின் கிராபிக்ஸ், 3டி தொழில்நுட்பம், சண்டைக் காட்சிகள், ரஜினியின் நடிப்பு உள்ளிட்ட பல அம்சங்களைப் பாராட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் தங்கள் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘2.0’ அசலான படம். ஹாலிவுட்டுக்கு நிகரானது. பிரம்மிக்க வைத்துவிட்டது தலைவா. ‌ஷங்கர் சார், நீங்கள் தமிழ், இந்திய சினிமாவின் பெருமை. மயங்கிவிட்டேன். ஒட்டு மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். திரையரங்கைத் தவிர வேறெங்கும் இந்த அற்புதத்தைப் பார்க்கும் தவறை செய்துவிடாதீர்கள்.

அக்‌‌ஷய் குமார் சார், அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக வாழ்ந்துள்ளீர்கள். கடவுளின் குழந்தை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவின் மேதை நிரவ் ஷா, கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் எனது இனிய நண்பர் எமி ஜாக்சன் என அனைவருக்கும் இந்தக் காவியப் படத்தில் பங்காற்றியதற்கு வணக்கங்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘2.0’ வெறித்தனம் தலைவா நீங்கள் பிரம்மிக்க வைத்துவீட்டீர்கள். திரையில் நீங்கள் வந்தால் தீப்பற்றுகிறது. ‌ஷங்கர் சார், உங்கள் குழு ஒரு காவியப் படத்தைக் கொடுத்துள்ளது. இந்தியப் படங்களுக்கான தரத்தை உயர்த்தியுள்ளது. தலை வணங்குகிறேன். நாம் அனைவரும் கொண்டாட ஒரு படம் இங்கு வந்துவிட்ட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்ப முடியாத அனுபவம். அனைத்து இந்திய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் மாற்றி எழுதப்படும். தலைவர் ரஜினிகாந்த், ஆசான் ‌ஷங்கர், அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா ப்ரொடக்‌‌ஷன்ஸ், எமி ஜாக்ஸன் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட ஆயிரக் கணக்கானோருக்கு தலை வணங்குங்கள். படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க நினைக்கிறேன் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.

‌ஷங்கரின் சிறந்த படங்களில் ஒன்று. 2.30 மணி நேரம் நம்ப முடியாத ஒன்றை வைத்து நம்மை மயக்குகிறது. லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள் என்று கே.வி.ஆனந்த் புகழ்ந்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, நன்றி ‌ஷங்கர் சார். என்ன ஒரு பார்வை. பிரம்மித்து விட்டேன். என்னைப் போன்ற தலைவர் ரசிகர் களுக்கு ’2.0’ ஒரு விருந்து. கண்டிப்பாக 3டியில் பாருங்கள். 3.0வுக்கு காத்திருக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சிம்ரன் தெரிவித்திருப்பதாவது, ‘2.0’வுக்கு வாழ்த்துகள். அற்புதமான படைப்பு. சமூக கருத்து, அட்டகாசமான கிராபிக்ஸ். ரஜினிகாந்த் சாருக்கு இது சிறப்பு. ‌ஷங்கருக்கு பெரிய வணக்கங்கள். அக்‌‌ஷய் குமாரும் இவர் களுடன் இணைந்து பொழுது போக்கான காட்சி விருந்தைத் தந்திருக்கிறார். முழுவதும் ரசித்தேன். எனது குழந்தைகளுடன் பார்த்தேன்.

இவ்வாறு பாராட்டி உள்ளனர். 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions