பொன்னியின் செல்வனில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – அவரே சொன்ன தகவல் இதோ!

Bookmark and Share

பொன்னியின் செல்வனில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – அவரே சொன்ன தகவல் இதோ!

மிருகம் ஆதியிடமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால் கால்ஷீட் காரணமாக இப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.இவர்கள் போக மிருகம் ஆதியிடமும் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால் கால்ஷீட் காரணமாக இப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால் இப்படத்தை லைக்காவுக்கு பதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில்தான் உள்ளதாம்.


Post your comment





Related News
பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!
காஷ்மீர் எல்லைக்கு செல்லும் ரசிகரான ராணுவ வீரருக்கு நடிகர் விஜய் வாழ்த்து
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
வெள்ளை என்பது அழகா? தொகுப்பாளரை திணற வைத்த அசோக் செல்வன்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஏமாற்றமா?
மரணத்தை நெருங்கி உயிர் தப்பித்த பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions