கலாமுக்கு அஞ்சலி செலுத்தாத சினிமாக்காரர்கள்...!

Bookmark and Share

கலாமுக்கு அஞ்சலி செலுத்தாத சினிமாக்காரர்கள்...!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கிப்போட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அப்துல் கலாமின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது.

ஒவ்வொரு தெருவிலும் அப்துல் கலாமின் படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள் கலாமின் மரணத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கதறியழுத சம்பவங்களும் நடந்துள்ளன. 

இப்படியாக அப்துல் கலாமின் மரணம் எல்லா தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தியநிலையில், திரைப்படத்துறையினரின் செயல் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.அப்துல் கலாமின் மரணச் செய்தி வெளியாக சில மணி நேரத்தில் தனுஷ் தன் பிறந்தநானை விமரிசையாகக் கொண்டாடினார். 

அந்த பார்ட்டியில் தண்ணிப்பார்ட்டியும் நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, வைரமுத்து, கமல், ரஜினி, சிவகார்த்திகேயன், பிசி ஸ்ரீராம், தாமு, வடிவேலு போன்ற வெகு சிலர் தவிர வேறு யாரும் குறிப்பாக நடிகர் நடிகைகள் இரங்கல் கூட தெரிவிக்க வில்லை. 

ஒரு சில நட்சத்திரங்கள் மட்டும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர். அதே நேரம் வழக்கம்போல் சந்தோஷமான, கேளிக்கையான, கிண்டலான விஷயங்களை மட்டும் தொடர்ந்த பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா நட்சத்திரங்களின் மனிதாபிமானமற்ற இந்த செயல் மக்கள் மத்தியில் அவர்கள் மீது வெறுப்பை விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 


Post your comment

Related News
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி.!
விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்
ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது
திறமை கொண்ட நடிகர்கள் இவர்கள்- விவேக் கூறிய அந்த நடிகர்கள் யார் யார்?
அப்துல்கலாம் நினைவிடத்தில் விவேக் 100 மரக்கன்றுகளை நடுகிறார்
திருமணத்துக்கு தயாரான சைத்தான் பட நாயகி!
“கலாம் விருதுகள்” அறிமுக விழா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions