நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு - பரபரப்பு தகவல்.

Bookmark and Share

நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு - பரபரப்பு தகவல்.

தென்னிந்திய பிரபல ந‌டிகை அஞ்சலி மீண்டும் தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ந‌டிகை அஞ்சலி சித்தி வீட்டில் இருந்து மாயமான பிறகு முதல் தடவையாக போலீஸ் நிலையத்தில் தலை காட்டினார். அதன் பிறகு யாரும் அவரை பார்க்க வில்லை.

அஞ்சலி எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. தெலுங்கு படங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் அதை உறுதிபடுத்த முடியவில்லை. அந்த படப்பிடிப்புகளில் கூட அவரை பார்க்க முடிய வில்லை என்கின்றனர்.


அரசியல்வாதி உறவினர் ஒருவரை அஞ்சலி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதற்கு அஞ்சலி தரப்பில் இருந்து மறுப்பு வந்தது. ஆனால் அப்போதும் கூட அவர் தன்னை மீடியாக்களுக்கு முன் வெளிப்படுத்தவில்லை.


அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் நேரில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு பலதடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் வரவில்லை. இறுதியில் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


அஞ்சலி எங்கு இருக்கிறார் என்று மர்மம் நீடிப்பதாக திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர். தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் பலர் விரும்புகிறார்கள். ஆனால் அஞ்சலியை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment

Related News
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
பெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல! - சீறும் வில்லன் நடிகர்!
2 வருடம் கழித்து 'சனம் ஷெட்டி'யை தேடிவந்த மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம்..!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions