நடிகை ரேவதி-இயக்குனர் சுரேஷ் விவகாரத்து - குடும்பநல கோர்ட்டு தீர்ப்பு!

Bookmark and Share

நடிகை ரேவதி-இயக்குனர் சுரேஷ் விவகாரத்து - குடும்பநல கோர்ட்டு தீர்ப்பு!

நடிகை ரேவதி-இயக்குனர் சுரேஷ் சந்திரமேனன் ஆகியோருக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

மண்வாசனை’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷா கேளுண்ணி என்ற ரேவதி(வயது 43). இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான சுரேஷ் சந்திரமேனனும் (50) காதலித்து 10.9.86 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில், சுரேஷ் சந்திரமேனனுக்கும், ரேவதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு 1.10.2012 அன்று ரேவதியும், சுரேஷ் சந்திரமேனனும் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், எங்களுக்கு 10.9.1986 அன்று ஆலந்தூர் பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 7.11.2002 முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் இனி சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை. எங்களது திருமணத்தை ரத்து செய்து, பரஸ்பரம் விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

சுரேஷ் சந்திரமேனனுக்கும், ஆஷா மேனனுக்கும் (ரேவதிக்கும்) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் 2002-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளனர். இருவரும் நிர்பந்தம், மிரட்டல் ஆகியவைகளுக்காக பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை என்று இந்த கோர்ட்டு நம்புகிறது. மேலும், இருவரும் பராமரிப்பு செலவுகளை எதிர்காலத்துக்கும் கோரமாட்டோம் என்று கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்பதை முடிவு செய்து, இவர்களது பரஸ்பரம் விவாகரத்து வழங்கப்படுகிறது. 10.9.1986 அன்று நடந்த திருமணத்தை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். 


Post your comment

Related News
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!
தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?
கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்!
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions