25 நாட்களாக அரங்குநிறைந்த காட்சிகளாக ஐ

Bookmark and Share

25 நாட்களாக அரங்குநிறைந்த காட்சிகளாக ஐ

எப்பேற்பட்ட படமாக இருந்தாலும் ஒரு வாரத்துக்கு மேல் தியேட்டர்களில் தாக்குப்பிடிப்பதில்லை. ரஜினி நடித்த லிங்கா படத்துக்கே இப்படியொரு நிலைதான் ஏற்பட்டது. இந்தநிலை ஏற்படாமல் தப்பித்த படம் என்றால்... அது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம்தான்.

சுமார் மூன்று ஆண்டு கால கடும் உழைப்பிலும், பல கோடி பட்ஜெட்டிலும் உருவான ஷங்கரின் ஐ படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. விக்ரமின் வித்தியாசமான கெட்டப் பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியானதால் ஐ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.  

அதன் காரணமாக ஐ படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் சாத்தியமானது. அதேநேரம் படம் பார்த்த ரசிகர்கள், ஷங்கர் இதற்கு முன் இயக்கிய படங்களைப்போல் ஐ படம் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.

அதுமட்டுமல்ல, ஷங்கரின் முந்தைய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு ஐ படத்துக்கு கிடைக்கவில்லை என்றும் சொல்லப்பட்து. ஆனாலும், வணிகரீதியில் ஐ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது என்பதே உண்மை!  ஐ படம் வெளியான பிறகு அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வெளியானது.

இப்படத்துக்காக ஐ படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்கிவிடுவார்கள் என கருத்துக்கு மாறாக, பெரும்பாலான தியேட்டர்களில் இன்னமும் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னையில் சத்யம் உட்பட பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் ஐ படம் 25-ஆவது நாளைக் கடந்து ஹவுஸ்புல் காட்சிகளாக தொடர்கிறது! தற்போதைய நிலவரப்படி ஐ படம் இன்னும் தொடர்ந்து ஓடி, வசூலில் மேலும் சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்!


Post your comment

Related News
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions