மீண்டும் தமிழுக்கு வரும் ஐஸ்வர்யா ராய் ?

Bookmark and Share

மீண்டும் தமிழுக்கு வரும் ஐஸ்வர்யா ராய் ?

மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார் என்றால் கண்டிப்பாக அந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் அல்லது ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் கூடவே கிளம்பிவிடும்.

ஓ காதல் கண்மணி' படத்திற்குப் பிறகு மணிரத்னம் தமிழில் இயக்க உள்ள படத்தில் கார்த்தி, மம்முட்டி நாயகர்களாக நடிக்கப் போகிறார்கள் என்றும், நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இப்போது அந்தப் பட்டியலில் புதிதாக ஐஸ்வர்யா ராயும் சேர்ந்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். குழந்தை பிறந்த பின் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் ஹிந்திப் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஹிந்தியைத் தவிர தென்னிந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், தன் அபிமான இயக்குனரான மணிரத்னம் எப்போது நடிக்க அழைத்தாலும் அந்த வாய்ப்பைத் தவற விட மாட்டார் என்றே சொல்கிறார்கள்.

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவது, வெறும் வதந்தியா அல்லது உண்மையா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.


Post your comment





Related News
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions