ஐஸ்வர்யா ராஜேஷை கலங்க வைத்த காக்கா முட்டை!

Bookmark and Share

ஐஸ்வர்யா ராஜேஷை கலங்க வைத்த காக்கா முட்டை!

அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்கள் மூலம் பிரபலமானார். தற்போது இடம்பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பே தனுசும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை என்ற படத்தில் நடித்தார் அவர். அந்த சமயத்தில் சரியான படங்கள் கைவசம் இல்லாததால் தேடிவந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று அந்த படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

காரணம், அந்த படத்தில் அவருக்கு 30 வயது மதிக்கத்தக்க சேரி பெண் வேடமாம். அதனால் தனது உடல் எடையை பெருக்க வைத்ததோடு, முக அழகையும் அழுக்குப்படுத்திதான் நடித்தாராம்.

ஆனால், அதன்பிறகு அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் வெளிவந்து அவருக்கென ஒரு இமேஜை உருவாக்கி விட்டன. அதனால், தான் 30 வயது பெண்ணாக கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் காக்கா முட்டை படம் வெளிவந்தால் தனது ஹீரோயின் இமேஜ்க்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று மனதளவில் குழம்பி புலம்பிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


Post your comment





Related News
இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்!
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions