நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு காலில் காயம்!

Bookmark and Share

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு காலில் காயம்!

பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் வாழ்க்கை இந்தியில் சினிமா படமாக தயாராகிறது. சரப்ஜித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர்.

பாகிஸ்தானில் இந்திய உளவாளி என்று சந்தேகித்து இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோர்ட்டில் சரப்ஜித் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் தண்டனையை அரசு தள்ளி வைத்தது.

இந்த நிலையில், ஜெயிலிலேயே சக கைதிகளால் சரப்ஜித் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் சரப்ஜித் படம் தயாராகிறது. இதில் சரப்ஜித் கதாபாத்திரத்தில் ரந்திப் ஹோடாவும் அவரது சகோதரி தல்பிர் கவுர் வேடத்தில் ஐஸ்வர்யாராயும் நடிக்கின்றனர். ஓமங்குமார் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்துக்காக ஐஸ்வர்யாராய் உடம்பை கருப்பாக்கி கிராமத்து பெண்ணாக மாறி கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.


இதன் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. படத்துக்காக சண்டை காட்சியொன்றை படமாக்கினர்.

வில்லன்கள் துரத்த ஐஸ்வர்யாராய் ஓடுவது போல் இந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யாராய் திடீரென்று கால் இடறி கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்தார். படக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்து வலி குறைந்த பிறகு மீண்டும் அவர் அந்த காட்சியில் நடித்து முடித்தார்.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions