கொண்டாட்டத்தில் துள்ளிகுதிக்கும் அஜித் ரசிகர்கள்!

Bookmark and Share

கொண்டாட்டத்தில் துள்ளிகுதிக்கும் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜீத் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது வேதாளம் திரைப்படம். அதை பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டிய ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி எடுக்க முடியாமல் வேதனையில் விம்மி வருகிறார்கள் ரசிகர்கள்.

எல்லா முன்னணி நடிகரின் படங்கள் ரிலீசாகும்போதும்,  அவருடைய ரசிகர்களுக்கு என சிறப்புக் காட்சிகளை முதல் நாள் ஒதுக்குவார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். அந்த காட்சியின் டிக்கெட்டை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் மொத்தமாக வாங்கி,  மாவட்டம் முழுக்க உள்ள கிளை மன்றங்களுக்குக் கொடுப்பார்கள். 

ஆனால் நடிகர் அஜீத்,  ரசிகர் மன்றங்களைக் கலைத்து விட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் அவரது ரசிகர்களுக்கு சிறப்புக் காட்சி தர மறுக்கிறார்கள். மேலும், மற்ற நடிகரின் ரசிகர்கள் சிறப்புக்காட்சி எடுத்து வருமானம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளதாக ஆதங்கப்படுகிறார்கள் அஜித் மன்ற நிர்வாகிகள்.

அஜீத்,  மங்காத்தா படம் வருவதற்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். "என் ரசிகர்கள் படம் ரிலீசாகும் போது கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அதற்குச் செய்யும் செலவில் எல்லோரும் தங்களுடைய  குடும்பத்தைக் கவனியுங்கள். அதுதான் என் ரசிகர்கள் எனக்கும் செய்யும் உதவி!" எனக் கூறி,  மன்றங்களைக் கலைத்தார்.

ஆனாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து மன்றத்தை நடத்தி வருவதுடன், அவரின் எல்லா படங்களையும் திருவிழா போல் கொண்டாடவும் செய்கின்றனர். அதேபோல் வேதாளம் படத்துக்கும் கட்அவுட் வைத்து பட்டாசு வெடிக்க பரபரப்பாகி வரும் நேரத்தில், ரசிகர் மன்றம் இல்லாத வேதனையும் அவர்களிடம் தெரிகிறது.


Post your comment





Related News
நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - நீங்க தயாரா ரசிகர்களே.!
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!
அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?
தன்னம்பிக்கையின் ’தல’ – அஜித் குறித்த சிறப்புத் தொகுப்பு இதோ!
தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!
ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions