தொடரும் அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமென்ட்!

Bookmark and Share

தொடரும் அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமென்ட்!

தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் நாள், படம் வெளியாகும் நாள் என அனைத்துமே வியாழக்கிழமைகளில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருபவர் அஜித்.  

அதன்காரணமாகவே மற்ற நடிகர்களின் படங்கள் எல்லாமே வெள்ளிக்கிழமைகளில் வெளியானால் அஜீத் மட்டும் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையே வெளிவருகிறது.

அந்தவகையில், தற்போது அவர் வீரம் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் 56வது படத்தின் படப்பிடிப்பு இன்று புதன்கிழமைதான் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அஜித் தலையிட்டு தனது லக்கி டேயான வியாழக்கிழமைதான் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் எனறு கூறியதால், இன்று தொடங்கயிருந்த அஜித் படத்தின் படப்பிடிப்பை நாளை வியாழக்கிழமை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தில் அஜித் கொல்கத்தா இளைஞனாக நடிப்பதால், விஜய்யின் கத்தி படம் போன்று கொல்கத்தாவில்தான் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் சென்னையிலுள்ள பின்னி மில்லில் ஒரு பிரமாண்ட கொல்கத்தா செட் அமைத்து வந்தவர்கள், இப்போது செட் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால் அந்த செட்டிலேயே படப்பிடிப்பை தொடங்குகிறார்களாம்.

ஆக, என்னை அறிந்தால் படம் போன்றே அஜீத்தின் 56வது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பும் சென்னையை சுற்றியே நடைபெற உள்ளதாம். 


Post your comment





Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
அஜித்தை கவர்ந்த படம்
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions