அடுத்து மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் அஜித்!

Bookmark and Share

அடுத்து மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் அஜித்!

அஜித்தின் ‘வேதாளம்’ நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாஸ்கர்தி ராஸ்கல்’ படம் அஜித்துக்கு மிகவும் பிடித்து இருப்பதாக தெரிகிறது. வழக்கமாக ரீமேக் படங்களில் அஜித் அதிகமாக நடிப்பது இல்லை. 

‘பாஸ்கர்தி ராஸ்கல்’படத்தை மலையாளத்தில் இயக்கிய சித்திக் தமிழில் இயக்க இருக்கிறார். இயக்குனர் சித்திக் இந்த படத்தில் ரஜினி அல்லது அஜித் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 

ரஜினி ‘கபாலி’, தொடர்ந்து ‘எந்திரன்–2’ படங்களில் நடிக்க இருக்கிறார். எனவே அஜித்தும் இந்த படத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நடித்த நயன்தாராவே ஜோடியாக நடிப்பார் என்று தெரிகிறது. 

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
அஜித்தை கவர்ந்த படம்
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions