வீரம் அஜீத்துக்கு அச்சமில்லை.?

Bookmark and Share

வீரம் அஜீத்துக்கு  அச்சமில்லை.?

தெலுங்கில் செளர்யம், சங்கம், தருவு ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் பின்னர் அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது.

அதனால் என்னை அறிந்தால் படத்தை அடுத்து மீண்டும் அஜீத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் சிவா. வீரம் படத்தை விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்த நிலையில், இந்த புதிய படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் டைட்டீலை படம் திரைக்கு வரும் நேரத்தில் வெளியிட்ட நிலையில், சிவாவோ, வீரம் டைட்டீலை முன்னரே அறிவித்து விட்டார்.

அதேபோல் இந்த முறையும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே டைட்டீலை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறாராம். அதனால், நூற்றுக்கணக்கான டைட்டீல்களை யோசித்து இப்போது 'அச்சமில்லை' என்ற தலைப்பினை முடிவு செய்து வைத்திருக்கிறாராம் சிவா.

அஜீத்துக்கும் இந்த டைட்டீல் ஓகேதானாம். அதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த டைட்டீலை உறுதிப்படுத்த உள்ளாராம் டைரக்டர் சிவா.


Post your comment





Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
அஜித்தை கவர்ந்த படம்
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions