அஜித் படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர்!

Bookmark and Share

அஜித் படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர்!

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜித் நடிக்க உள்ள தல 56 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அஜித் உடன் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கும் பணி அதாவது நட்சத்திர தேர்வு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

லேட்டஸ்ட்டாக படத்தின் வில்லன் யார் என்பதை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் வீரம் சிவா.  அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜில் தெலுங்குப் படத்தில் வில்லனாக மிரட்டியவர் கபிர் சிங்.

பாலிவுட் நடிகரான அவரது நடிப்பு ஜில் படத்தில் பேசப்பட்டது. எனவே, அவரையே அஜித்துடன் மோத வைக்க தீர்மானித்த வீரம் சிவா, பெரிய சம்பளம் கொடுத்து கபிர் சிங்கை கமிட் பண்ணி இருக்கிறார்.

இந்த ஒப்பந்தம் அஜித்தின் ஒப்புதலுடன் நடந்திருக்கிறது. பொதுவாகவே அஜித் நடிக்கும் படங்களில் வில்லன் வேடங்களுக்கும் செம முக்கியத்துவம் இருக்கும். என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய், ஆரம்பம் படத்தில் மகேஷ் மஞ்ரேகர், பில்லா-2  படத்தில் வித்யுத் ஜம்வால், சுதான்சு பாண்டே ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப் போல் தல 56 படத்தில் கபிர் சிங்குக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நம்பலாம்.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions