தல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Bookmark and Share

தல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

வெற்றி, தோல்வி, ரசிகர்கள், வெறுப்பவர்கள், போற்றுபவர்கள், விமர்சனம் செய்பவர்கள் என நிறைய பேர் பல விஷயங்களை சந்தித்து இருக்கிறார்கள். அதிலும் இவையெல்லாமே சினிமா நடிகர்களுக்கு அதிகமாக வரும்.

தற்போது இரண்டு நடிகர்களை பற்றி பார்ப்போம். எந்தளவுக்கு எதிரிகள் இருக்கிறார்கள் அதைவிட பலமடங்கு ரசிகர்களை கொண்டவர்கள் இந்த நடிகர்கள். யார் என்று கேட்கிறீங்களா நம்ம தல அஜித்தும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் இருவர் தான். இவர்களை பற்றிய சில ஒற்றுமைகளை பார்ப்போம்.

குடும்பம்சிரஞ்சீவி என்ற மாபெறும் நடிகரோடு சினிமாவில் நுழைந்து பின் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றவர் பவன் கல்யாண்.

தல அஜித்தும் ஒரு பாடகர் மூலம் சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென தனி பாதையை அமைத்தவர்.

படிப்புதல, பவர் ஸ்டார் இருவருமே பட்டதாரிகள் கிடையாது. ஆனால் இருவருமே மிகவும் ஸ்டைலிஷ்ஷாக ஆங்கிலம் பேசுவார்கள். இது இவர்கள் கொடுத்த பல பேட்டிகள் நமக்கு உதாரணம்.

உடை மற்றும் அணுகுமுறைPk மற்றும் Ak இருவருடைய ஸ்டைல் தான் மாஸ். சாதாரண ஒரு நடை பக்கா BGM அவ்வளவு தான் ரசிகர்கள் விழுந்துவிடுவார்கள். அதுபோன்ற காட்சிக்கு உதாரணமாக அஜித்துக்கு மங்காத்தா, பில்லா சொல்லலாம். பவன் கல்யாணுக்கு பஞ்சா, தம்முடு.

கேரமாவுக்கு பின்குஷி நடிகரும் சரி, வாலி நடிகரும் சரி படங்களை தாண்டி ரசிகர்களுக்கு தரிசனம் தருவதே இல்லை. எப்போதும் வெளியில் வந்தால் மிகவும் சாதாரண மனிதனாக வருவார்கள். இரு நடிகர்களுமே தங்களுடைய ரசிகர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை தான் கூறியிருக்கிறார். குடும்பத்தை கவனி, சமூகத்துக்கு நல்லது செய்.

பவன் கல்யாண் கூறியது, Do your duty

அஜித் கூறியது, Live & Let Live

பட விழாக்களும், மீடியா சந்திப்பும்இருவருமே படத்தை தாண்டி கேமரா பக்கம் அவ்வளவு சீக்கிரம் வரமாட்டார்கள். ஆனால் பவன் கல்யாண் மெகா குடும்ப நிகழ்ச்சிகளிலும், ஜன சேனா நிகழ்ச்சிகளிலும் வருவார்.

ஆனால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இவர்களது பெயர் வந்தால் அந்த அரங்கமே அதிரும்.

தோல்விகளும், ரசிகர்களும்இந்த தலைப்பு தான் இவர்களது பலம். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுக்க முடியவில்லை என்றாலும் இவர்களது ரசிகர்கள் எப்போதும் தங்களது நாயகர்களை விட்டுக் கொடுத்ததே கிடையாது.

தோல்வி காலங்களில் ஒரு ரசிகர் கூட இழந்தது இல்லை. அப்படி ஒரு படம் நன்றாக வந்தால் அதற்கு பெரிய ஓப்பனிங் கொடுப்பது ரசிகர்கள் தான்.

இப்படி நிறைய ஒற்றுமைகளை பவன் கல்யாண், அஜித் இருவரிடமும் இருக்கிறது.

இறுதியாக பவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கடமராயுடு படத்திற்கும், அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விவேகம் படத்திற்கு வாழ்த்துக்கள்.


Post your comment

Related News
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை - உற்சாகத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions