அஜித்துக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?

Bookmark and Share

அஜித்துக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு ஸ்லோவேனியாவில் இன்று தொடங்குகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், 2 வது ஹீரோயினாக அக்ஷரா ஹாசனும் நடிக்கவுள்ளனர்.

காமெடி வேடத்தில் கருணாகரன் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க பிரசன்னா, அர்ஜுன், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி உட்பட பலரிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

மேலே சொன்ன ஹீரோக்கள் யாரும் பிடிகொடுக்காததால் தற்போது பாபி சிம்ஹாவிடம் இப்படத்தின் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருதை வென்ற பாபி சிம்ஹா தற்போது முழுநேர ஹீரோவாக நடித்து வருகிறார்.

‘ஜிகர்தண்டா’ போல இப்படத்திலும் அழுத்தமான வேடமென்பதால் பாபி சிம்ஹா இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் மற்ற விஷயங்களைப் போலவே வில்லன் யாரென்பதிலும் படக்குழு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.


Post your comment





Related News
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions