தல-56 யூனிட்டுக்கு பிரியாணி விருந்தளித்த அஜீத்!

Bookmark and Share

தல-56 யூனிட்டுக்கு பிரியாணி விருந்தளித்த அஜீத்!

தலப்பாக்கட்டு பிரியாணி போல திரையுலகில் தல பிரியாணி பிரபலமாகியுள்ளது. அஜீத்தின் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர்களுக்கு தனது கையாலே பிரியாணி சமைத்து பரிமாறுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பெரும்பாலும் தனக்கு படப்பிடிப்பு இல்லாத சமையங்களில் சமைக்கும் அஜீத், மாதம் ஒரு முறை ஏதேனும் ஒரு ஸ்பெசல் அயிட்டங்களை தனது வீட்டு நபர்களுக்கு தானே சமைத்து விருந்து கொடுக்கிறார்.

அதோடு, தான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் சினிமா கலைஞர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்து வரும் அஜீத் படப்பிடிப்பு தொடங்கும்போது தனக்கான சீன் இல்லாத நாளில், படப்பிடிப்பு தளத்திலேயே சமைத்து, மதிய நேரத்தில் அனைவருக்கும் விருந்து பரிமாறுவார்.  மற்றவர்கள் ருசித்து சாப்பிடுவதை பார்த்து ரசிப்பார். 

இப்படிப்பட்ட அஜீத், தற்போது நடந்து தல 56-வது படப்பிடிப்பு தொடங்கியபோதே யூனிட்டுக்கு பிரியாணி விருந்து வைக்க திட்டமிட்டார். ஆனால் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்ததால் இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருவதோடு, இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளதால் நேற்று முன்தினம் யூனிட்டுக்கு விருந்து கொடுத்துள்ளார் அஜீத். மேலும் அவர் பரிமாறும் நேரத்திலும் அங்குமிங்கும் ஓடி அனைவருக்கும் பரிமாறியும் மகிழ்ந்திருக்கிறார் அஜீத்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions