அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?

Bookmark and Share

அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?

’அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள்.. 58 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட அஜித்துக்கு கடந்த சில நாட்களாக கசப்பான அனுபவமாகவே இருந்தது. உடற்காயம், விவேகம் தோல்வி என அஜித்தின் திரை பயணம் சற்று ஆட்டம் கண்ட ஆண்டாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளை சொல்லலாம். 

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் அமைந்தது. விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது. உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது. 

இத்தனைக்கும் அதேநாளில் ரஜினி - சன் பிக்ச்சர்ஸ் எனும் பிரம்மாண்ட கூட்டணியுடன் போட்டிபோட்டு அஜித் இந்த வெற்றியை ருசித்துள்ளார் என்பது அவரது செல்வாக்கை உணர்த்துகிறது. இப்படி பல சிறப்புகளை கொண்ட விஸ்வாசம் வெளியாகி இன்று 100-வது நாள் என்றால் சும்மாவா. அதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் அசத்தி வருகிறார்கள். 


Post your comment

Related News
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த ஹாட் அப்டேட்
ஒரே நாளில் அஜித்தின் அமர்க்களமான சாதனை!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions