நேபாள நிலநடுக்கத்திற்கு நன்கொடை : அக்ஷய் மறுப்பு

Bookmark and Share

நேபாள நிலநடுக்கத்திற்கு நன்கொடை : அக்ஷய் மறுப்பு

நேபாள நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி, இவ்வாரம் திரைக்கு வர உள்ள கப்பார் இஸ் பேக் படத்தின் முதல்நாள் வசூலை, நேபாள நாட்டின் நிலநடுக்கத்திற்கு நிவாரண நிதியாக வழங்க அக்ஷய் குமார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த தகவலை அக்ஷய் குமார் மறுத்துள்ளார். இதுதொடர்பாக, அக்ஷய் குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கப்பார் இஸ் பேக் படத்திற்கு நான் தயாரிப்பாளர் இல்லை.

நான் அந்த படத்தின் நடிகன் மட்டுமே, படத்தின் முதல்நாள் வசூலை, நன்கொடையாக கொடுப்பது குறித்து நான் எந்த முடிவும் செய்ய இயலாது. தவறான தகவலை பரப்பாதீர்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அக்ஷய் குமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள கப்பார் இஸ் பேக், படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions