அர்னால்டை நடிப்பை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார்?

Bookmark and Share

அர்னால்டை நடிப்பை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார்?

எந்திரன்2 படத்தின் அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி இணையத்தைப் பரபரப்பாக்கியது. படத்தின் வில்லனாக அர்னால்டு நடிப்பார் என இந்திய சினிமாவே ஆர்வத்தில் இருந்தது.

எந்திரன்2 படத்துக்கு ஒப்புக்கொன்டார் அர்னால்ட் ஆனால் அவர் சம்பளமாகக் கேட்ட தொகையாலேயே அர்னால்ட் வேண்டாம் என நிராகரித்துவிட்டதாக படத்திற்கு நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளன.

100 கோடிக்கும் மேலான சம்பளம் மேலும் உடன் வரும் உதவியாளர்களுக்குத் தனி செலவு என அனைத்தையும் கணக்கிட்டே அக்‌ஷய் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் அர்னால்டை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார் என்ற கேள்வியும் தற்போது எழத்தான் செய்கிறது.

சரி, யார் இந்த அக்‌ஷய்குமார் என கேட்டால் பலருக்கு சிரிப்பு வரும் அக்‌ஷய் தெரியாதா எனக் கிண்டல் செய்யத்தான் செய்வோம். ஆனால் நிதர்சன உண்மை நம்மூர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் அளவே தெரிந்த இந்தி மக்களுக்கு இன்னமும் விஜய் , அஜித் கூட பழக்கமாகவில்லை என்பதே சமீபத்திய 100 பிரபலங்களில் சர்வே காண்பித்தது.

அப்படித்தான் ரஜினி,கமல், விஜய், அஜித், படங்களை மட்டுமே பார்த்து விசிலடித்த கடைக்கோடி ரசிகனுக்கு அக்‌ஷய் அவ்வளவு பரிச்சயம் இல்லைதான். இங்கே அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் மட்டுமே பிரபலம்.

அக்‌ஷய் குமார் யார் என முதலில் பார்ப்போம். பாலிவுட்டின் டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக அக்‌ஷய் பெயரை நிராகரிக்கவே முடியாது. கில்லாடி , மொஹ்ரா, சப்ஸே படா கில்லாடி, பாம்பே டாக்கீஸ், பாஸ், பேபி, கப்பர் ஈஸ் பேக் பிரதர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் நம்மூரின் மேல்தட்டு சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம்.

சமீபத்தில் தமிழின் மெகா ஹிட் படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா படத்தின் ரீமேக்கான கப்பர் இஸ் பேக், மற்றும் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் ரீமேக்கான ஹாலிடே, இப்போது ‘கத்தி’ படத்தின் ரீமேக் என உண்மையில் தமிழ்ப் படங்கள் மீது ஆர்வம் செலுத்தும் ஒரு இந்தி நடிகர் அக்‌ஷய் குமாராகத்தான் இருப்பார்.

இன்னும் வெளியில் செல்லும் ஆண்கள், பெண்களை விட வீட்டில் இருக்கும் மக்களுக்கு அக்‌ஷய் குமாரை நன்றாகவே தெரியும். சன் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான தில்..தில்..தில் நிகழ்ச்சியில் நடிகைகளை சாகசம் செய்யச் சொல்லி கொடுமை செய்வாரே ஒரு உத்தமர் அவர் தான் இந்த அக்‌ஷய் குமார். 

சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு திரைத்துறையினர் பலரும் பண உதவிகளைக் கொடுத்து வர அதில் இருப்பதிலேயே அதிகத் தொகையாக ஒரு கோடியை வழங்கியவர் அக்‌ஷய் குமாரே.

அக்‌ஷய் குமார் தமிழுக்கு வருவது மகிழ்ச்சி என்றாலும் நம்மை ஆங்கிலப் படங்கள் பார்க்கவைத்தவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர், மற்றும் ஜாக்கிசான் எனில் மூன்றாமவர், பிரிடேட்டர், கமாண்டோ, டோட்டல் ரிகால், டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களுக்குச் சொந்தக்காரரான அர்னால்டே.

நம்மூர் அயூத பூஜை மீம்ஸ்களில் கூட அர்னால்டை நாம் விட்டுக்கொடுத்ததில்லை என்ற ரீதியில் கண்டிப்பாக அர்னால்டை அக்‌ஷய் குமாரால் ஈடு செய்வது கொஞ்சம் சிரமமே. எனினும் இந்தப் படம் தமிழில் அறிமுகமாக அக்‌ஷய்க்கு கிடைத்த மிகச்சரியான வாய்ப்பு எனலாம்.நம்மைப் பொருத்தமட்டில் பாலிவுட்டிலிருந்து மற்றுமொரு பெரிய நடிகரின் இனிய வரவு எனலாம். வெல்கம் அக்‌ஷய் குமார்


Post your comment

Related News
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?
மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார் ஆவேசம்
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions