அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .

Bookmark and Share

அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும்

சமீபமாக தென்னிந்திய திரை மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் தங்களது மொழி பிராந்தியத்தை தாண்டி , அடுத்த மாநிலங்களிலும்  தங்களது படங்கள் ஓட வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் கோலோச்சி வரும் அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் " என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா"  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். 

தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனு இமானுவேல். தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும்  இந்தப் படத்தில் சரத் குமார்,  action king அர்ஜுன்  ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, மற்றும் பல்வேறு  நடிகர்களுடன் நதியா மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். 

வி.வம்சி இயக்கத்தில், ராஜீவ் ரவி ஒளிப்பதிவு இயக்கத்தில், விஷால்- சேகர் இரட்டையர் இசை அமைக்க, ராஜீவன் கலை இயக்கத்தில், பா.விஜய் வசனம் மற்றும் பாடல்கள் இயற்ற , கே.நாகபாபு, பி.வாசு இணை தயாரிப்பில், லகடப்பாடி ஸ்ரீஷா ஸ்ரீதர் "ராமலெக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ் " சார்பில் " என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" திரை படத்தை  தயாரிக்கிறார்.


Post your comment





Related News
அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா? சூப்பர் அப்டேட்!
கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்!
கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்!
கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்!
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?
மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா?
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions